இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உதவி கலெக்டர் ஆபிசில் தர்ணா

1194பார்த்தது
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உதவி கலெக்டர் ஆபிசில் தர்ணா
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உக்கம் பருத்திகாடு பெரியார் நகர் பகுதி மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். நடவடிக்கை இல்லாததால், 25க்கும் மேற்பட்டோர் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய உதவி கலெக்டர் சுகுமார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி