சேலம் நங்கவள்ளியில் டாஸ்மாக் கடை அகற்றக்கோரி போராட்டம்

1101பார்த்தது
சேலம் நங்கவள்ளியில் டாஸ்மாக் கடை அகற்றக்கோரி போராட்டம்
சேலம் நங்கவள்ளி அருகே வனவாசி பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தகவல் அறிந்த மேட்டூர் உதவி கலெக்டர் சுகுமார், போலீஸ் டிஎஸ்பி சண்முகசுந்தரம், தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், ஒரு மாத காலத்திற்குள் டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி