தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன இழப்பீடு வழங்க கோரிக்கை

2பார்த்தது
தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன இழப்பீடு வழங்க கோரிக்கை
ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் கோவலங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி குருநாதன் (40) நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். திடீரென ஆடுகள் கத்தியதால் வெளியே வந்து பார்த்தபோது, தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி