மேட்டூரில் கடையின் பூட்டை உடைத்து அரிசி பருப்பு கொள்ளை

4பார்த்தது
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆர்.எஸ். பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை உடைத்து மர்ம நபர்கள் 50 மது பாட்டில்களைத் திருடிச் சென்றனர். மேலும், மேச்சேரி அருகே பொட்டனேரியில் உள்ள செந்தில் என்பவரது மளிகைக் கடையின் பூட்டை உடைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதி வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி