சேலம் மாவட்ட போலீஸ் துறையில் பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 6, இருசக்கர வாகனங்கள் 9 என மொத்தம் 15 வாகனங்கள் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் குமாரசாமி பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை நாளை முதல் நேரில் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5000, இருசக்கர வாகனத்திற்கு ரூ. 2000 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் தெரிவித்துள்ளார்.