சேலம்: செய்தியாளர் காரை சுத்து போட்ட தவெகவினர்

2925பார்த்தது
சேலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சூரஜ் என்ற வடமாநில இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்து விளக்கம் கேட்கச் சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர்களை, தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் பதிலளிக்க மறுத்துச் சென்றார். மேலும், ஒளிப்பதிவாளர் சசிகுமாரை காரால் இடிக்க முயன்றதுடன், செய்தியாளர்களைச் சூழ்ந்து காரை அடித்து நொறுக்கி, செய்தியை வெளியிட்டால் மிரட்டல் விடுத்தனர். இந்தச் சம்பவம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி