சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி எம் செல்வனபதி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஒன்பதாம் தேதி மாலை 4 மணி அளவில் சேலம் கலைஞர் மாளிகை வீரபாண்டியர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை நடைபெற உள்ளது.
கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், இன்னால், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, மாணவரணி, நெசவாளர் அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் சேலம் மேற்கு மாவட்டம் மேட்டூருக்கு வருவது குறித்தும், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.