மேட்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் இறப்பு

66பார்த்தது
மேட்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் இறப்பு
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பாத்திரமடு அரசு உண்டு உறைவிட பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தவர் பார்த்திபன் (வயது 15). இவர், நேற்று (ஜூலை 30) காலை தன்னுடைய நண்பர்களுடன் பள்ளிக்கூடம் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றார். நண்பர்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபன், திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி