மேட்டூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

1பார்த்தது
மேட்டூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன்நகர் பகுதியைச் சேர்ந்த கேசவன்-சரண்யா தம்பதியினரின் 14 வயது மகள் விகாஷினி, மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விகாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பாட்டி கதவைத் தட்டிப் பார்த்தபோது திறக்கப்படாததால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது விகாஷினி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அதிர்ச்சியடைந்த பாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி