மேட்டூர் அணைக்கட்டு முனியப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று நடைபெற்றது. அணைக்கட்டு முனியப்ப சாமிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு, பால், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காவிரி நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.