கோவை சூலூர் பகுதியில் ரகுபதி என்பவரின் மகள் தர்ஷினி (5 ஆம் வகுப்பு) பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சிறுமியின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் கொளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.