மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 105 கன அடியாக சரிவு

2பார்த்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 105 கன அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணை தண்ணீர் வரத்து மாறுபடுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 116 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 105 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 91.61 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 91.48 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 54.35 டிஎம்சியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி