மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 797 கன அடியாக சரிவு

3பார்த்தது
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 797 கன அடியாக சரிவு
தமிழக கர்நாடக எல்லை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாறுபடுகிறது. நேற்று 1,144 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 797 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 79.93 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 79.85 அடியாக சரிந்துள்ளது. தற்போது அணையில் 41.80 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி