கர்நாடகாவில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 471 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1709 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 78.81 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தற்போது 40.78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.