பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மேலும் 62 நாட்களுக்கு நீடிப்பு

0பார்த்தது
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மேலும் 62 நாட்களுக்கு நீடிப்பு
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக 137 நாட்கள் திறக்கப்படும் இந்த தண்ணீர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 62 நாட்களுக்கு, அதாவது ஜனவரி 15-ந் தேதி வரை வினாடிக்கு 400 கனஅடி வீதம் திறந்து விட முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி