கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர், கடந்த சில ஆண்டுகளாக பச்சை நிறமாக மாறி வருகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணை 7 முறை நிரம்பிய போதிலும், கோட்டையூர், பண்ணவாடி, செட்டிப்பட்டி பகுதிகளில் தேங்கியுள்ள நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.