உலக அளவிலான மாற்றுத்திறனாளிகள் டேக்வாண்டோ போட்டி பக்ரின் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம் அரசு கலைக்கல்லூரியில் வரலாறு பிரிவில் 2-ம் ஆண்டு மாணவரான மேச்சேரியை சேர்ந்த மூர்த்தி (வயது21) என்பவர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தங்கப்பதக்கம் வென்று மேச்சேரிக்கு வந்த மூர்த்திக்கு மேச்சேரி அருள் நம்பி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பஸ் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கல்லூரி மாணவர் மூர்த்திக்கு மாலை அணிவித்து பாராட்டி இனிப்பு வழங்கினர்.