சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த குட்டப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 20). கயிறு திரிக்கும் தொழிலாளியான இவர் 15 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறி, மேட்டூர் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று (டிசம்பர் 27) இந்த வழக்கு தொடர்பாக பிரபுவை போலீசார் கைது செய்தனர்.