மேட்டூர்: மனைவியுடன் தகராறு.. தொழிலாளி தற்கொலை

2152பார்த்தது
மேட்டூர்: மனைவியுடன் தகராறு.. தொழிலாளி தற்கொலை
மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குணசேகரன் (29) மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சுகன்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ள இவருக்கு, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த குணசேகரன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி