சேலம் நரசோதிபட்டியைச் சேர்ந்த லேட் பட்டறை தொழிலாளி சத்யராஜ் (30), நண்பர்களுடன் மேட்டூர் சுற்றுலா வந்தபோது, மாசிலாபாளையம் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், மேட்டூர் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சத்யராஜின் உடலை மீட்டனர். மேட்டூர் போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.