சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே கொம்பாடிபட்டியைச் சேர்ந்த ரிஷியா, நேற்று அதிகாலை தனது 10 வயது மகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களைக் காணாததால், கணவர் கோவிந்தராஜன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தாய் மற்றும் மகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.