குடும்பத் தகராறு காரணமாக மேட்டூரை சேர்ந்த இளம் பெண் மாயம்

15பார்த்தது
குடும்பத் தகராறு காரணமாக மேட்டூரை சேர்ந்த இளம் பெண் மாயம்
ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாக்கியத்தின் மகள் சத்யா, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் சொக்கனூரைச் சேர்ந்த சித்தையன் மகன் பெருமாளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் பாக்கியத்தின் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 4ஆம் தேதி குடும்ப தகராறு காரணமாக சத்யா கணவர் வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் பாக்கியம் நேற்று மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி