மேட்டூர் அருகே குடிபோதையில் பெண்களை தாக்கிய வாலிபர் கைது

9பார்த்தது
மேட்டூர் அருகே குடிபோதையில் பெண்களை தாக்கிய வாலிபர் கைது
மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டணத்தில், கூலி தொழிலாளி பிரபாகரன் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த செல்வி மற்றும் பத்மாவதி ஆகியோரை, மதுபோதையில் வந்த பிரசாத் என்பவர் தாக்கியுள்ளார். செல்வி, பிரசாத்திடம் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், செல்வியை கீழே தள்ளி உதைத்து தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற பத்மாவதி மற்றும் பிரபாகரனையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வி, பத்மாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.