சேலம்: மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி.. வாலிபர் சாவு

52பார்த்தது
சேலம்: மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி.. வாலிபர் சாவு
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிகுந்தம் வேங்கானூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). இவர் நேற்று தனது நண்பர் மகேந்திரனுடன் மேட்டூரில் இருந்து மேச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். எம். காளிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் நண்பர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதுதெரியவந்தது. இதையடுத்து மகேந்திரன் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி