ஓமலூரில் கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது

65பார்த்தது
ஓமலூரில் கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அடைக்கனூர் பூனைக்கரடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது56). இவரது வீட்டில் சூரமங்கலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் போலீசார் திடீரென சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சாவை பாக்கெட் செய்து விற்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றதாக பூசாரிப்பட்டி செல்லாண்டி காலனி பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி