வெளி மாநிலத்தில் இருந்துபஸ்ஸில் கஞ்சா கடத்தி வந்த 2பேர் கைது

5பார்த்தது
வெளி மாநிலத்தில் இருந்துபஸ்ஸில் கஞ்சா கடத்தி வந்த 2பேர் கைது
சேலம் ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று இரும்பாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் கைகளில் பைகளுடன் நின்றிருந்த தர்மபுரி பெரியம்பட்டியை சேர்ந்த முனியப்பன் (23) மற்றும் கோவை புளியக்குளம் பகுதியை சேர்ந்த அந்தோணி (37) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த பைகளில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து பஸ்களில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி