சேலம் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சுமதி (45) நேற்று சேலத்தில் இருந்து தின்னப்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வாகன ஓட்டிகளின் உதவியுடன் பஸ்சை பின் தொடர்ந்து டால்மியா போர்டு நிறுத்தத்தில் நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் விரைந்து வந்து பஸ் பயணிகள், டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.