சேலம்: முதியவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

70பார்த்தது
சேலம்: முதியவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
சேலை எருமாபாளையம் தொங்கு முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மோட்டார் சைக்கிளில் அன்னதானப்பட்டி சண்முகா நகர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் லட்சுமணனின் பாக்கெட்டில் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓடினர். 

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த மிதன் குமார், கிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு காளிகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி