சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி காலனியில் முருகன்-தாமரை வாணி தம்பதியினர் வளர்த்து வந்த 15 செம்மறி ஆடுகளில், மர்ம விலங்கு தாக்கி 4 ஆடுகள் நேற்று காலை இறந்து கிடந்தன. மேலும் 4 குட்டிகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர், இறந்த ஆடுகளைப் பிரேத பரிசோதனை செய்தார்.