ஓமலூரில் காதல்திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இரு குடும்பத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் மாப்பிள்ளை உறவு பெண்ணை வக்கீல் ஒருவர் தாக்கி கையைஉடைத்து விட்டதாக கூறி, ஓமலூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வக்கீல் உள்பட இருதரப்பிலும் 4பேரை போலீசார் கைதுசெய்தனர். ஆனால் ஓமலூர் வக்கீல் சங்கம் சார்பில் பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வக்கீலை ஜாமீனில் விடுவிக்க கூறினர். அவர்களது கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். இதற்கு வக்கீல்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கோர்ட் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.