அ. தி. மு. க. பொதுக்கூட்ட இடத்தை இளங்கோவன் பார்வையிட்டார்

0பார்த்தது
அ. தி. மு. க. பொதுக்கூட்ட இடத்தை இளங்கோவன் பார்வையிட்டார்
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஓமலூர் பஸ் நிலைய வளாகத்தில் அ.தி.மு.க. 54-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்க, அமைப்புச் செயலாளர் செம்மலை மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். மணி எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் மணி எம்.எல்.ஏ. பார்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியை முடுக்கி விட்டனர்.

தொடர்புடைய செய்தி