சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் இளைய மகன் தமிழரசன் (26), நேற்று காலை வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது நண்பர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தமிழரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என சந்தேகிக்கின்றனர்.