ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டி ஊராட்சி பாப்பாங்காட்டூர் மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணி சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஓமலூர் மேற்கு ஒன்றிய அ. தி. மு. க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.