ஓமலூர் அடுத்த தாரமங்கலம் அருகே வெண்ணானம்பட்டி கிராமத்தில்
பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில், சேலம் எம்பி செல்வகணபதி 'கணபதி மந்திரம் புரியவில்லை' என்று பேசியதை மாவட்ட தலைவர் ஹரிராமன் கடுமையாக விமர்சித்தார். பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் குர்ஆன் ஓதுவது புரியவில்லை என செல்வகணபதியால் கூற முடியுமா? என ஹரிராமன் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம்
பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.