ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருநீற்று புதன் இன்று அனுசரிக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜோசப் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதில் பங்குத்தந்தை தவக்கால ஆன்மீக சிந்தனை மற்றும் நோன்பு குறித்து எடுத்துரைத்து, கிறிஸ்தவர்களின் நெற்றியில் குருத்தோலை சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிட்டு பிரார்த்தனை செய்தார்.