சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த குதிரை குத்தி பள்ளம் பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் பொதுமக்களின் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறி, பொதுமக்கள் நேற்று மாலை அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி பேருந்தை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.