ஓமலூர் பேருந்து நிலைய வளாகத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களால் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால், பயணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சாலையை கடந்து சென்று பேருந்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பொதுக்கூட்டங்களால் பேருந்து நிலையம் ஒரு பொதுக்கூட்டத் திடலாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி எதிர்காலத்தில் பேருந்து நிலையப்பகுதியில் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்காமல் நகரை ஒட்டி உள்ள வேறொரு பகுதியில் காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.