சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 15 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் பங்கேற்றனர். 31 மூட்டைகள் கொண்டு வரப்பட்ட தேங்காய் பருப்பு, அதிகபட்சமாக ரூ. 216.99, குறைந்தபட்சமாக ரூ. 165.75, சராசரியாக ரூ. 192.69 என மொத்தம் ரூ. 2,14,452.96-க்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.