சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு
போக்குவரத்து கழக மேலாளர் வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி ராதா, ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி ஏனாதி கிராமத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட மழைநீரில் சிக்கி உயிரிழந்தனர். வயதான காரணத்தால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.