விஜய்யை காண குவிந்த கூட்டம்.. சேலத்தில் போக்குவரத்து நெரிசல்

1635பார்த்தது
விஜய்யை காண குவிந்த கூட்டம்.. சேலத்தில் போக்குவரத்து நெரிசல்
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று (பிப்.13) தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். அவரை காண திரண்ட கூட்டத்தால் ஓமலூர் அருகேயுள்ள டோல் கேட் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விஜய் காரை ரசிகர்கள் சுற்றிவளைத்து சூழ்ந்து கொண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி விஜய் கார் புறப்பட்டுச் செல்ல உதவினர்.

தொடர்புடைய செய்தி