ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், பாகம் எண் 294க்கு உட்பட்ட ஜெயா தியேட்டர் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு இன்று வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் அரசு அலுவலர்களால் வழங்கப்பட்டன. இந்தப் பணியில் பேரூராட்சி தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி உதவி செய்தார். இந்த நிகழ்வு ஓமலூரில் நடைபெற்றது.