ஓமலூர் அருகே ஜல்லி கிரஷர் எந்திரத்தில் சிக்கி டிரைவர் பலி

2பார்த்தது
ஓமலூர் அருகே ஜல்லி கிரஷர் எந்திரத்தில் சிக்கி டிரைவர் பலி
சேலம் அருகே ஓமலூரில் உள்ள தனியார் ஜல்லி கிரஷரில் லாரி டிரைவராக பணிபுரிந்த முருகன் (56) நேற்று காலை ஜல்லி அரைக்கும் எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். சக ஊழியர்களால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி