எடப்பாடி பழனிசாமி அரசு இல்லத்தை காலி செய்து புதிய வீட்டில் குடியேற்றம்

1137பார்த்தது
எடப்பாடி பழனிசாமி அரசு இல்லத்தை காலி செய்து புதிய வீட்டில் குடியேற்றம்
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 2011 முதல் வசித்து வந்த சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்கிறார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்த நிலையில், அவர் ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டில் குடியேற உள்ளார். இன்று (மே 29) அங்கு பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய வீடு ஒரு பிரபல தொழில் அதிபருக்கு சொந்தமானது என்றும், அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி