நாளைக்கே தேர்தல் வந்தாலும் தே. ஜ கூட்டணி வெற்றி பெறும்

0பார்த்தது
நாளைக்கே தேர்தல் வந்தாலும் தே. ஜ கூட்டணி வெற்றி பெறும்
நாமக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து சேலம் வந்த பாஜக தலைவர் ஒருவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை இதற்கு சாட்சி என்றும் அவர் கூறினார். முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதியை முதல்வராக்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாகவும், குடிநீர், சொத்து வரி, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நாளைக்கே தேர்தல் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி