சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ரயில்வே தேர்வு வாரியத்தின் குரூப்-D தேர்வில் உள்ள 22,195 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 19.02.2026 முதல் தொடங்குகிறது.
கணினி அடிப்படையிலான இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை 02.03.2026க்குள் www.rrbchennai.gov.in இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். ரயில்வே போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.