ஓமலூர் அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி கே. மோரூர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதிப்பதாக தீவட்டிப்பட்டி
போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ்
இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது வேலு என்பவர் அனுமதியின்றி மளிகை கடையில் மது அருந்த அனுமதித்தது தெரியவந்தது. இதைடுத்து போலீசார் மளிகை கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வேலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.