சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கநாதர் திருக்கோவிலில், தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட பிரிவின் சார்பில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஸ்ரீ ஹயக்கிரிவ வித்யா மகா ஹோமம் இன்று நடைபெற்றது. தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்தினார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இந்த யாகம் நடத்தப்பட்டது.