பெரியார் பல்கலையில் நான் முதல்வன் செயல்பாடு மையம் தொடக்கம்

4பார்த்தது
பெரியார் பல்கலையில் நான் முதல்வன் செயல்பாடு மையம் தொடக்கம்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நான் முதல்வன் திட்ட செயல்பாட்டு மையம் நிறுவப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று தமிழ்நாட்டின் 11 அரசு பல்கலைக்கழகங்களில் நான் முதல்வன் திட்ட செயல்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டு தொடக்க விழா நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மையத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி