சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள எட்டிக்குட்டப்பட்டி கிராம ஊராட்சி அலுவலகத்தில், பத்து ரூபாய் இயக்கத்தின் சமூக ஆர்வலர் மோகன்ஜி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதி பெற்றார். காவல்துறை பாதுகாப்புடன் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பத்து ரூபாய் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.