சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மொழியின் தொன்மையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு பேரணியாகச் சென்றனர். இந்த நிகழ்வு தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்தது.